இந்தியா – ஆஸ்திரேலியா: காத்திருக்கும் சவால்கள் என்ன?
ஆரன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி புது தெம்புடன் இந்திய அணி உள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றி கூடுதல் வலுவுடன் இந்திய அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறது ஆஸ்திரேலியா.
சமபலம் பொருந்திய இரு அணிகளும் மோதுவதால் நிச்சயம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து காத்திருக்கிறது என்றே கூறலாம். இந்திய அணியை பொறுத்தவரை ஷிகர் தவான், ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள் என்பதால் கூடுதல் பலம்.
விராட் கோலியும் நல்ல பார்மில் உள்ள நிலையில் மிடில் ஆர்டரில் களம் இறங்கும் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப்பந்த் சிறப்பான பங்களிப்பை அளிப்பர். இந்திய அணியில் கணிசமான ரன்களை குவிக்க முடியும். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் சமபலம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. ஆரன் பெஞ்ச், அலெக்ஸ் மற்றும் பீட்டர் ஆகியோர் அதிரடியாக விளையாட கூடியவர்கள். அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்மித் அணியில் இடம் பெற்று இருப்பது கூடுதல் பலம் .
பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியின் பும்ரா, முகமது ஷமி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என நம்பலாம். சாக்கில், குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சும் இந்திய அணிக்கு கைகொடுக்கும். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிசில் ஆகியோர் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருப்பார். சவால்களை கடந்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





