--- --:--:-- --

இனி கட்டண சேனலின் அதிகபட்சக் கட்டணம் ரூ.12 – டிராய் அறிவிப்பு

8

கட்டணச் சேனல்களின் அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

 

திருத்தி அமைக்கப்பட்ட கட்டணத்தின் படி இனி எந்த ஒரு நிறுவனமும் தங்களது சேனலின் அதிகபட்ச கட்டணத்தை 12 ரூபாய்க்கு மேல் நிர்ணயிக்கக்கூடாது. இதன் மூலம் தொலைக்காட்சி சேனல்களுக்கான மாதாந்திர கட்டணம் கணிசமாக குறைந்து வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon