--- --:--:-- --

நிர்பயா வழக்கில் மரண தண்டனை கைதிகளின் கடைசி மனுக்கள் தள்ளுபடி

10

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் துணை மருத்துவப் படிப்பு மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஒரு குற்றவாளி திகார் சிறையில் இறந்து போன நிலையில், சிறார் குற்றவாளி தவிர்த்த இதர நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

அதற்கு எதிராக அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை கடந்த 18-ம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது. இவர்களை வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் ஏற்றுவதற்கான கருப்பு வாரன்ட் எனக் கூறப்படும் மரண வாரண்டு பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஒத்திகைகள் திகார் சிறையில் நடக்கின்றன.

 

இந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் அளித்த அவகாசத்தில் அடிப்படையில் இறுதிக் கட்ட சட்ட நிவாரணமாக இந்த இருவரும் உச்ச நீதிமன்றத்தில் குறைதீர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வீரமணி, ரோகின்டன் ஆரிமன், அசோக் பூஷன், ஆர் பானுமதி அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்துள்ளது.

 

சட்டரீதியான கடைசி வாய்ப்பு முடிவுற்ற நிலையில் இனி கருணை அடிப்படையில் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.

Leave a Reply

Right Menu Icon