--- --:--:-- --

நியூசி.,க்கு எதிரான 2-வது டி-20 போட்டி.. இந்தியாவின் வெற்றி நடை தொடருமா..?

sdg

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. நியூ சிலாந்து மண்ணில் முதல் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த இந்தியா இன்றைய போட்டியிலும் வெற்றி நடையை தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

நியூசிலாந்துக்கு டூர் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி கடந்த வெள்ளியன்று நடைபெற்றது.இதில் நியூசிலாந்து முதலில் ஆடி 203 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல், கேப்டன் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

 

அதே ஆக்லாந்து மைதானத்தில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஏமாற்றம் தந்த ரோகித் சர்மா இன்றைய போட்டியில் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆக்லாந்து மைதானமும் இந்திய அணிக்கு ராசியான மைதானம் என்பதால் இன்றும் வெற்றி நடை தொடரும் என எதிர் பார்க்கலாம்.

Leave a Reply

Right Menu Icon