ஐஐடி கல்லூரி மாணவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு..!
ஆவடி அருகே ரயில் தண்டவாளத்தில் சென்னை ஐஐடி கல்லூரி மாணவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த மாணவி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மேகாஸ்ரீ என விசாரணையில் தெரியவந்தது. டெல்லியில் பிஹச் டி படித்த மாணவி 3 ஆண்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே பணியாளர்கள் கொடுத்த தகவலின் பேரில் சடலம் மீட்கப்பட்டது.






