வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்த 6 வயது சிறுவன்..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்த 6 வயது சிறுவன் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ்பவானி வாய்க்காலில் சிறுவனின் உடலில் இருந்து வருவதாக கடத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுவனை வாய்க்காலில் இருந்து மீட்டனர்.
பின்னர் அந்த சிறுவனை காப்பாற்றி விடலாம் என்று கூறி காவல் ஆய்வாளர் துரைபாண்டி முதலுதவி செய்தும் பலனளிக்கவில்லை. இதைதொடர்ந்து அந்த சிறுவன் யார் என்பது குறித்தும் எப்படி வாய்க்காலுக்குள் வந்தான் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






