--- --:--:-- --

சென்னை உட்பட 8 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

9

ட கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட 8 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மேலும் விரிவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக சென்னை காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon