சிக்கன் மற்றும் முட்டையை இப்படி சாப்பிட்டால் பறவை காய்ச்சல் வராது..!
பறவை காய்ச்சல் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ள நிலையில் இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பது குறித்து எஃப்எஸ்எஸ்ஏஏ எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இறைச்சியும் முட்டையும் சமைக்கும்போது தொற்று கிருமி பரவாமல் இருக்க 24 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரைகுறையாக சமைக்கப்பட்ட இறைச்சியையும் ஆப் பாயில் போட்ட முட்டைகளையும் உண்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவைகளை கையால் தொடுவதை தவிர்க்குமாறும் உயிரிழந்த பறவைகளை வரும் கையால் தொட வேண்டாம் என்றும் இறைச்சியை திறந்தவெளியில் வைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






