--- --:--:-- --

“தண்ணீரை சேமிக்காவிட்டால் கேப்டவுன் போல சென்னை மாறும்”- மத்திய அமைச்சர் பேச்சு..!

7

தண்ணீரை சேமிக்கும் பொறுப்பை மக்கள் உணராவிட்டால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் போல் தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரம் போல கடும் வறட்சியால் பாதிக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 

தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த 2017ஆம் ஆண்டில் மிக கடுமையான வறட்சி ஏற்பட்டது. தண்ணீரே இல்லாத நகராக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் தனிநபருக்கு கிடைக்கக்கூடிய சராசரி நீரின் அளவும் குறைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

தண்ணீரை சேமிக்க வேண்டிய தங்கள் பொறுப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையெனில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்கள் கேப்டவுனாக மாறிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon