வங்கத்தை பிரித்தால் என் ரத்தத்தை கொடுத்து தடுப்பேன்..!
மேற்குவங்க மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேவைப்பட்டால் அத்தகைய முயற்சிகளை முறியடித்து தனது சொந்த ரத்தம் சிந்தவும் தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சி கூட்டத்தில் உரையாற்றிய மம்தா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது எனவும், சிலர் என்னை மிரட்டுகிறார்கள் ஆனால் அதனால் தான் கவலைப்படவில்லை எனவும் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு தான் பயப்பட வில்லை எனவும் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தை பிரிக்க முயற்சித்தால் தனது ரத்தத்தை கூட சிந்துவேன் எனவும் தெரிவித்தார்.






