--- --:--:-- --

வீட்டிற்குள் புகுந்து நாயை வேட்டையாடும் சிறுத்தை..!

5

காராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வீட்டில் இருந்த நாயை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நாசிக் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வீடு ஒன்றில் நுழைந்துள்ளது.

 

அப்பொழுது சிறுத்தை நுழைவதைக் கண்ட நாய் சிறுத்தையை நோக்கி குலைத்துள்ளது. முதலில் பின்வாங்கிய சிறுத்தை பின்னர் நாயை கவ்விக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

இதனால் கிராம மக்கள் சிறுத்தை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Right Menu Icon