அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன்..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஜோ பைடன் வென்றதாகவும் விரைவில் தான் மீண்டும் வெற்றி பெறப்போவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தீவிர இடதுசாரிகளுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தால் வாக்குகள் எண்ணப்பட்டதால் ஜோ பைடன் வென்றதாக குற்றம்சாட்டிய அவர் வாக்கு எண்ணிக்கையின் போது பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் அனைத்தும் தனது வாக்குகளை திருடும் போது ஏற்பட்டதாக தெரிவித்த டிரம்ப் பைடன் தரப்பில் சிக்கிக்கொள்ளாமல் சாமர்த்தியமாக தப்பித்து விட்டதாக தெரிவித்தார். மேலும் தபால் வாக்குப்பதிவு கேலிக்கூத்தானது என்று விமர்சித்துள்ளார்.






