ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்தில் கசப்பான அனுபவத்தை எதிர் கொண்டேன் – நமீதா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்தில் கசப்பான அனுபவத்தை எதிர் கொண்டதாக நடிகை நமீதா தெரிவித்திருக்கிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி சிறப்பு தரிசனத்தில் நமீதா தனது கணவர் உடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த முறை திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு வந்த போது நல்ல முறையில் நடத்தப்பட்டதாகவும் இந்தமுறை குழப்பமும் அலைக்கழிப்புகள் இருப்பதாக கூறிய நமிதா அது சரி செய்யப்பட வேண்டும் என்றார்.






