வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை..!
மதுரையில் கொரொனா ஊரடங்கால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் வங்கி கொடுத்த அழுத்தம் காரணமாக ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
அனுப்பானடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் அவரது மனைவி தமிழ்ச் செல்வியும் கூலித்தொழிலாளர்கள். அண்ணாநகர் பகுதியில் ஒரு தனியார் வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் தமிழ்செல்வி ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.
6 தவணைகளை சரியாக செலுத்திய நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்செல்வி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வங்கி கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






