--- --:--:-- --

விசா வாங்குவதற்காக தான் திருமணம் செய்து கொண்டேன்..!

3

விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்துகொண்டேன் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்துபிரபல மானவர் ராதிகா ஆப்தே.

 

அவர் அண்மையில் அளித்த பேட்டியில் 48 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த ஒரு இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனாலும் தனக்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 

அப்படி என்றால் எதற்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்கலாம். வெளி நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும் எளிதாகவும் விசா கிடைக்கும் என்றனர்.

 

அதற்காகத்தான் அவரை மணந்து அதன்பின் என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் எனவும் அவசியம் ஏற்பட்டால் தனது கணவரை சந்திக்க செல்வேன் எனவும் தெரிவித்தார்.

Right Menu Icon