தமிழகத்தில் நான்காவது மெகா தடுப்பூசி முகாம்..!
தமிழகத்தில் நான்காவது முறையாக பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரொனா பரவலை குறைக்க ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நான்காவது முகாம் இன்று இருபதாயிரம் இடங்களில் நடைபெறுகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் 35 விழுக்காடு பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்றும் 65 விழுக்காடு பேர் இரண்டாவது தவணை எடுத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இன்று இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






