இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படம் வெளியிட்டு என் விருப்பப்படி தான் உடை அணிவேன் எனக்கூறிய அமலா..!
இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படங்களை கேலிசெய்து விமர்சித்தவர்களை அமலாபால் சாடியுள்ளார். அமலாபால் கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில் ஒரு பெண் தனது மனம், உடல் உள்ளிட்ட அனைத்து நிலையையும் அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவராக இருக்கிறார் எனவும் பெண்ணுக்கு விரும்புவதை செய்யும் உரிமை இருக்கிறது எனவும் பதிவிட்டிருந்தார். அமலா பாலின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலர் கேலி செய்து கொண்டிருக்கின்றனர்.
அதற்கு பதிலளித்து பேசிய அமலாபால் பெண் தனது விருப்பப்படி தான் உடை அணிவேன் எனவும், வாழ்க்கையை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.







