மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்..!
நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் காவல்துறையின் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமாரபாளையம் கோட்டைமேடு மேம்பாலத்தில் மனைவியுடன் காரில் சென்றபோது ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி செயினை தாக்கியதாகவும் இதில் தனது மனைவி உயிரிழந்ததாகவும் சபரிநாதன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் திடீர் திருப்பமாக சபரிநாதனே தனது மனைவியை கொன்றது அம்பலம் ஆனது. தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததால் எழுந்த குடும்ப பிரச்சினை காரணமாக காரில் வைத்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சபரிநாதன் கொள்ளை கும்பலால் மனைவி கொல்லப்பட்டதாக நாடகம் ஆடியதாக காவலர்கள் கூறுகின்றனர்.
வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்று சபரிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கொலையான நிலையில் தந்தையும் கைது செய்யப்பட்டதால் ஒன்றரை வயது குழந்தை ஆதரவற்ற நிலையில் உள்ளது.






