அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 12:00 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுக கொறடா தேர்வு செய்வது எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
அதேபோல் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி நடைபெற இருப்பதால் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்த கூட்டத்திற்கு வரும் எம்எல்ஏக்கள் அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






