வீட்டிற்குள் கணவன் மனைவி கழுத்து அறுத்து கொலை..!
கோவில்பட்டியில் வீட்டிற்குள் கணவன் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியருக்கு மனோஜ் குமார் என்ற மகனும், உமா மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். வீடு கட்டியது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலங்கலாக கிடந்தனர். போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றன.





