பெண் குழந்தை பிறந்ததால் திட்டிய கணவர்..! குழந்தையை விட்டுச் சென்ற தாய்..!
திருச்சி அருகே கணவர் திட்டியதால் குழந்தையை விட்டுச் சென்ற நிலையில் மீண்டும் குழந்தையை தேடி வந்துள்ளார். மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தையை ஒரு துண்டை விரித்து அதில் வைத்து விட்டு குழந்தையின் தாய் சென்றுவிட்டார்.
குழந்தையை மீட்ட மருத்துவமனை நிர்வாகம் விட்டு சென்ற தாயை தேடி வந்தனர். இதனிடையே குழந்தையை விட்டு சென்றது மணப்பாறை அடுத்த அம்மா சத்திரம் புதூரைச் சேர்ந்த தனலட்சுமி என தெரியவந்தது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் கணவர் தமிழரசன் திட்டியுள்ளார்.
இதனால் குழந்தையை தனலட்சுமி விட்டு விட்டு சென்றது தெரியவந்தது. செய்தியை பார்த்துவிட்டு மனம் கேட்காமல் மீண்டும் திரும்பி வந்து குழந்தையை பெற்றுக் கொண்டார்.





