சிலந்திகள் கூட்டமாக சுவரில் ஊர்ந்து செல்லும் திகிலூட்டும் காட்சி..!
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வீட்டில் சிலந்திகள் கூட்டமாக சுவரில் ஊர்ந்து செல்லும் திகிலூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலந்திகள் என்றால் பொதுவாகவே மக்களின் மனதில் அச்சமும் அச்சுறுத்தலும் நிலவும் சூழலில் இதுபோன்ற வீடியோக்களை நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
புகைப்படம் வெளியான நிலையில் இது போட்டோஷாப் மூலம் தயாரிக்கப்பட்டது என்று கருத்து நிலவியது. இந்த நிலையில் சிலந்திகள் ஊறும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.






