நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுக்காகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் போட்டு தீர்க்கும் கனமழையால் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





