--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

02

மிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலுக்கு மத்தியிலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில் இரண்டாவது நாளாக கனமழை பெய்தது.

 

 

அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர், அரக்கோணம், வாலாஜா, மேல்விஷாரம், ஆற்காடு, கலவை, நெமிலி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வாணியம்பாட்டியில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. பெரியபேட்டை, கச்சேரி சாலை, பெருமாள்பேட்டை, நியூடவுன், ஜனதாபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டியது.

 


இந்நிலையில், கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் அதனை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஐந்து நாட்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது

Leave a Reply

Right Menu Icon