--- --:--:-- --

இந்த 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

4

ரும் சனிக்கிழமை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வரும் 21ஆம் தேதி 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில், வரும் 18-ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவக் கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையக் கூடும் என்பதால், 19-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

 

20ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon