--- --:--:-- --

குக் வித் கோமாளி சீசன் 4 வின்னர் இவர் தான்..!

11

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மைம் கோபி, ஸ்ருஷ்டி, விசித்திரா, கிரண், சிவாங்கி மற்றும் ஆண்ட்ரியன் என ஆறு போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் யார் குக் வித் கோமாளி சீசன் 4 கோப்பையை தட்டி செல்லப்போகிறார் என தெரியவில்லை. ஆனால், தற்போது சூப்பர் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

 

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தபடியே, குக் வித் கோமாளி சீசன் 4ன் டைட்டில் வின்னராக மைம் கோபி கோப்பையை தட்டி சென்றுள்ளார். ஆம், மைம் கோபி தான் குக் வித் கோமாளி 4ன் டைட்டில் வின்னர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி பிடித்துள்ளார். விசித்திரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என உறுதியாக தெரியவந்துள்ளது.இதுவரை நடந்த குக் வித் கோமாளி முதல் மூன்று சீசன்களில் வனிதா, கனி, ஸ்ருதிகா என மூன்று பெண்கள் தான் டைட்டில் வின்னராக இருந்துள்ளனர். அதனால் முதல் முறையாக ஒரு ஆண் குக் வித் கோமாளியின் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். அதை மைம் கோபி செய்து அசத்தியுள்ளார்.

Right Menu Icon