மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை.. துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!
சென்னையில் நான்கு வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசவுஸ் தெரு பள்ளப்பன் தெருவில் வசித்து வருபவர் செந்தில்.
இவருக்கு நான்கு வயதில் இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில் சம்பவத்தன்று குழந்தை தினேஷ் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது பால்கனியிலிருந்து கீழே வாகனங்கள் செல்வதை எட்டி பார்த்தபொழுது குழந்தை தவறி விழுந்து படுகாயம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் பேரதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






