மகளிருக்கு மாதம் ரூ.1,000..புதிய விண்ணப்பம்..!
மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, விரைவில் மகளிருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி மேலும் 11.8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி இந்த முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தமுறை முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. ஆனால் இந்த முறை அவர்களுக்கும் பணம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.





