--- --:--:-- --

“நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடை இல்லை!” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

jj

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை எனவும், தேர்தல் நடத்துவதற்கான நடைமுறையை தொடரலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது.

 

தேர்தல் நடைபெற்ற நிலையில், தபால் வாக்குகள் பதிவு செய்வதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கையை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கை தனி நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.

 

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டு தனி நீதிபதி, 3 மாதத்திற்குள் கோகுல் தாஸை தேர்தல் அதிகாரியாகவும் தனி நீதிபதி நியமித்தார்.

 

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரேசன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நடிகர் சங்கத்துக்கு புதிதாக மீண்டும் தேர்தல் நடத்த தடையில்லை. தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடரலாம் எனவும் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் தேர்தல் அறிவிப்பாணையை உயர்நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அதிகாரி வெளியிடக்கூடாது எனவும் கூறி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 20-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon