தனுஷின் கர்ணன் படம் இன்று வெளியானது..! ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..!
இன்று தனுஷின் கர்ணன் படம் வெளியாகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் கர்ணன் பட போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கண்டா வரச் சொல்லுங்க, புராணம் பாடல்கள் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கர்ணன் திரைப்படம் வெளியாவதையொட்டி நேற்று தனுஷ் ரசிகர்கள் படகு மூலம் சென்று பழைய துறைமுக தூண்களில் கர்ணன் பட போஸ்டரை கட்டியது குறிப்பிடத்தக்கது.







