தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட வாய்ப்பு..!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் கொரொனா சூழல் காரணமாக அவருடைய பதவி காலம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அது மேலும் மூன்று மாதம் நீட்டிக்கப்பட்ட நிலையில் சண்முகத்தின் பதவி காலம் ஜனவரி 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் அடுத்த தலைமை செயலாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளராக பொறுப்பு வகித்த ஹன்ஸ்ராஜ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா 1986ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் தற்போது கூடுதல் பொறுப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையை கவனித்து வருகிறார்.






