--- --:--:-- --

அதிபர் டிரம்ப்பின் யூடியுப் சேனல் முடக்கம்..!

2

கொள்கைகளை மீறி வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்டதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சேனலை யூடியுப் நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

 

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் வன்முறையை தூண்டும் விதமாக கொள்கையை மீறி செயல்பட்டதால் ட்ரம்பின் சேனலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யவும், நேரடி ஒளிபரப்புகளை மேற் கொள்ளவும் அதிபர் டிரம்பின் சேனலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஏழு நாட்கள் தடை மேலும் நீட்டிக்கப்படும் எனவும் யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon