--- --:--:-- --

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கைவரிசை..!

2

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை உதவி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 160 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். டெல்லி பாபு தனது குடும்பத்துடன் சென்னைக்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

 

மீண்டும் வீட்டிற்கு திரும்பிய பொழுது வீட்டின் முன்பாக பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 160 சவரன் தங்க நகைகள், இரண்டு லட்சம் ரொக்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து சென்ற ரத்தினகிரி காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon