பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வினியோகம்..!
பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11 மணி முதல் இணையம் வழியாக வழங்கப்படுகிறது.
துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் துணை தேர்வு வருகிற 6-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.







