--- --:--:-- --

அரசு வாகனம் – கண்டெய்னர் லாரி மோதி விபத்து! ஆய்வு பணிக்கு சென்ற அன்னூர் பி.டி.ஓ உட்பட அரசு அதிகாரிகள் எட்டு பேர் படுகாயமடைந்த பரிதாபம்! போலீசார் விசாரணை !!!

1.1

கோவைமாவட்டம் அன்னூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ஸ்ரீமோகன்.இவரும் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பணி மேற்பார்வையாளர்கள் என மொத்தம் எட்டு பேர் இன்று அன்னூரில் இருந்து கரியாம்பாளையம் சாலை வழியாக நான்கு சக்கர போலிரோ வாகனம் மூலம் ஆய்வு பணிக்காக பொன்னேகவுண்டபுதூர் பகுதி வழியாக சென்று கொண்டு இருந்தனர்.அப்போது, தெலுங்குபாளையம் அருகே எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது அரசு அதிகாரிகள் சென்ற கார் பயங்கரமாக மோதியது.

இதில் காரில் பயணித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீமோகன்,உதவி வட்டாரவளர்ச்சி அலுவலர் சொர்ணவேலம்மாள்,கீதா லட்சுமி, பணிமேற்பார்வையாளர் ராஜம்மாள் மற்றும் ஒட்டுநர் உட்பட அரசு அதிகாரிகள் எட்டுபேர் படுகாயமடைந்தனர். பின்னர், அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனைவரும் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டனர்.

இதில் ஓட்டுநர் சம்பத் மற்றும் வட்டாரவளர்ச்சி அலுவலர் ஸ்ரீமோகன் ஆகியோர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon