--- --:--:-- --

அரசு பள்ளி மாணவர்களுக்கு டி‌வி மூலம் பாடம் கற்பிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

11

தமிழகத்தில் கொரொனா தொற்று பரவலால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எனவே இதனை தொடர்ந்து கொரொனா அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான கல்வி நிலையங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடத்தை கற்பிக்கின்றனர்.

 

இந்நிலையில் பள்ளிகளை திறக்க காலம் கடந்த நிலையில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் வீட்டிலிருந்தபடி கல்வி கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடத்த போவதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படாது. டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சேவைக்கான வசதி இல்லாத மாணவர்களுக்காக இந்த முறை கையாளப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon