தமிழக அரசு 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் – கமல்ஹாசன்
பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்டு தமிழக அரசு 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மாணவர்கள் நலனுக்கு எதிரானது என கல்வியாளர்கள் கருதுவதாக கூறியுள்ளார்.
கல்லூரிகளில் சேர ,வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அவசியம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு அட்டவணையை வெளியிட்டு தேர்வு நடத்தலாம் என கமல் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்தில் தேர்வு நடத்த வேண்டும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் .
பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்டு தமிழக அரசு 12ஆம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டும் என கமல் வலியுறுத்தியுள்ளார்.






