சசிகலா பேசும் 6 வது ஆடியோ பதிவு வெளியீடு..!
நிச்சயம் அரசியலுக்கு வரப் போவதாகவும் இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என சசிகலா தெரிவித்திருக்கிறார். கடந்த சில நாட்களாக சசிகலா தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அதற்கான குரல் பதிவுகளும் வெளியிடப்படுகின்றன.
தற்போது கிஷோர் என்பவரிடம் அவர் பேசிய ஆறாவது குரல் பதிவு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுத்த கடந்த காலங்களில் இளைஞர் பாசறை உருவாக்கியதாகவும் அதை கவனத்துடன் தான் பார்த்து வந்ததாகவும் கூறியிருக்கிறார்.






