--- --:--:-- --

கொரொனா நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது..!

7

கொரொனா நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ம த்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஹர்ஷவர்தன் காணொலி முறையில் கேட்டறிந்தார்.

 

அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகத்தில் அதிகளவில் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்திற்கு குணமடைந்தோர் எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதாகவும், இறப்பு விகிதம் தேசிய சராசரி அளவிலும் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தீபாவளியை முன்னிட்டு பண்டிகைகள் வரவிருப்பதால் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon