கல்லூரிகள், பல்கலை.களுக்கு அரசு புதிய உத்தரவு..!
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து, கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு படியாக, கல்லூரிகள், பல்கலை.களுக்கு உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், பாதுகாப்பு முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்படியும், பேனிக் பட்டன், ரியல் டைம் டிராக்கர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.





