கோர விபத்து: 6 பள்ளி மாணவர்கள் பலி..!
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் பள்ளி வேன் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 மாணவர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மாணவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.



