--- --:--:-- --

டிக் டாக்கிற்கு மாற்றாக கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள செயலி..!

5

சீனாவின் டிக் டாக் சமூக வலைதளம் போன்று யூடியூப் ஷாப்ஸ் எனும் பெயரில் புதிய வீடியோ பகிர்வு சமூக வலைதளத்தை இந்தியாவில் இன்று கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. வீடியோ பகிரும் தளமான டிக் டாக்கிற்கு அண்மையில் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

 

இந்த சூழ்நிலையில் டிக்டாக்கை போலவே ரியல்ஸ் எனும் பெயரில் இன்ஸ்டாகிராம் புதிய வீடியோ பகிர்வு சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ பகிர்வு தளத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 15 வினாடிகள் வரையிலான வீடியோக்களை பகிர முடியும்.

Leave a Reply

Right Menu Icon