--- --:--:-- --

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

2

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று முன் தினம் அதிரடியாக குறைந்தது.

நேற்று முன் தினம் (ஏப்ரல் 11) நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,100க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,060க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.11,730க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.93,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon