--- --:--:-- --

மீண்டும் அதிரடி காட்டும் தங்கத்தின் விலை..!

2

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்பதை தாண்டி தற்போது ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

 

தொடர்ச்சியாக உயர்ந்துவந்த தங்கத்தின் விலை நேற்று (05.02.2026) அதிரடியாக சரிந்த நிலையில், நகைப் பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320க்கும், சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து இன்று (06.02.2026) காலை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக சரிந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில், இன்று (06.02.2026) மாலை வேளையில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,250க்கும், சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.12,200க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி, ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon