--- --:--:-- --

கடவுள் ராமர் இந்தியர் அல்ல….அவர் நேபாளி…! நேபாளி பிரதமர் பேச்சால் சர்ச்சை..!

7

ராமபிரான் இந்தியர் அல்ல என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள நாட்டு பிரதமர் கேபி ஒளி கூறியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ராமர் பிறந்த ஊராக கருதப்பட்ட வரும் அயோத்தி உண்மையிலேயே நேபாளத்தில் தான் உள்ளது என்றும் அது இந்தியாவில் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

 

காத்மாண்டுவில் உள்ள தன் இல்லத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பேசினார். ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கலாச்சார தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவை அவர் குற்றம் சாட்டினார்.

 

அண்மைக்காலமாக இந்தியாவுடன் நேபாளம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்திய பகுதிகளை தன் நாட்டுடன் சேர்த்து புதிய வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டுள்ளது. நேபாளத்தில் இந்தப் போக்குக்கு சீனா பின்னணியில் உள்ளதாக பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராமர் மற்றும் அயோத்தி குறித்து நேபாள பிரதமர் பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நேபாள பிரதமருக்கு அவர் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு எழுந்த பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon