கொரொனா மிகமிகமிக மோசமான நிலையை எட்ட வாய்ப்பு..!
உலகளவில் கொரொனா வைரஸ் பாதிப்பு மிக மிக மோசமான நிலையை எட்ட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் பேசியவர் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் தவறான திசையில் பயணித்துக் கொண்டுள்ளதாக எச்சரித்தார். உலக மக்களின் முதல் எதிரியாக கொரோனா வைரஸ் உருவெடுத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடுகள் விரிவான யுக்திகளை கையாளாவிட்டால் இன்னும் சில காலத்திற்கு இயல்பு நிலை திரும்ப போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிகளவு தொற்றுகள் பதிவாவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் கொரொனா வைரஸின் பரவல் தொடக்கம் குறித்து ஆராய சீனா சென்றிருக்கும் தங்களது குழு பணியை தொடங்கும் முன்பு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவன அதிகாரி மைக்ரியான் தெரிவித்தார்.







