--- --:--:-- --

என்னுடைய 5 மதிப்பெண்ணை வேறு மாணவனுக்கு வழங்குங்கள்..! சிறுவனின் இனிய கோரிக்கை

1

அமெரிக்காவில் பள்ளி சிறுவன் ஒருவன் தனது ஆசிரியருக்கு விடைத்தாளில் விடுத்த வினோத கோரிக்கை இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கென்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் விடைத்தாளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டிருந்தார்.

 

அதில் 94 மதிப்பெண்கள் எடுத்திருந்த அந்த மாணவன் தனக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் 5 ஐ அது மிகவும் தேவைப்படும் வேறு மாணவனுக்கு வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

 

இதனைப் பார்த்து வியப்படைந்த ஆசிரியர் சிறுவனின் பெருந்தன்மையை எண்ணி அவனது விடைத்தாளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட, அது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் சிறுவனை புகழ்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon