செல்பி எடுக்க சென்ற 3 பெண்களை இழுத்த ராட்சத அலை..!
ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் சிறிய பாறையின் மீது ஏறி நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த மூன்று பெண்களை திடீரென எழுந்த ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றதில் சகோதரிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இளம் பெண் ஒருவரை உயிரோடு மீட்டதோடு மற்ற இருவரின் சடலத்தையும் கைப்பற்றி ஒப்படைத்தனர்.





