--- --:--:-- --

பெற்ற மகனை ஏரியில் வீசி சென்ற கொடூர தந்தை தலைமறைவு..!

11

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக மூன்று வயது மகனை போரூர் ஏரியில் வீசிச் சென்ற தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென போரூரில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

 

பின்னர் தன்னுடன் வந்த மகனை ஏரியில் வீசிவிட்டு வேகமாக சென்றுள்ளார். அப்பொழுது ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர்கள் உடனடியாக சிறுவனை பத்திரமாக வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

விசாரணையில் ஏரியில் சிறுவனை வீசி சென்றது தலைமை செயலக காலனியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரிய வந்தது. தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை வீட்டில் வைத்து கதவை வெளிப்புறமாக போட்டுவிட்டு தனது மகனுடன் வெளியே சென்றுள்ளார்.

 

பின்னர் தனது மகனை ஏரியில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து மோகன்ராஜை காவல்துறையின் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon