--- --:--:-- --

ஹெல்மெட் உள்ளே இருந்த பாம்பு.. அணிந்த இளைஞருக்கு நடந்த சோகம்..!

2

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நிதியோடியை சேர்ந்தவர் ரத்தீஷ். இவர் தற்பொழுது வனத்துறையில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். ரத்தீஷ் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி ஹெல்மெட்டை பைக்கில் வைத்து சென்றுள்ளார். அந்த பகுதியில் இருந்த குட்டி பாம்பு ஒன்று ஹெல்மெட்டிற்குள் புகுந்துள்ளது.

 

அடுத்த நாள் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் ரத்தீஷ் ஹெல்மெட்டை கவனிக்காமல் அணிந்துள்ளார். சிறிது நேரத்தில் தலையில் ஏதோ கடித்ததை உணர்ந்துள்ளார். ஹெல்மெட்டை எடுத்து பார்த்தபொழுது அதில் குட்டி பாம்பு இருந்தது தெரியவந்தது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தீஸ் உடனே ஹெல்மெட்டை தூக்கி வீசியுள்ளார். கடித்த பாம்பு எதுவென சரியாக கவனிக்காததால் பதற்றமான ரத்தீஷ் உடனே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்கல் ரத்தீசை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

 

இறுதியில் ரத்தீஷை கடித்தது விஷமற்ற பாம்பு என்பது தெரிய வந்தது. இதனால் ரத்தீஷ் உயிர் தப்பியுள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon